பாரம்பரிய பனிச்சறுக்கு "ஸ்கை" மாரத்தான் போட்டி : 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பாரம்பரிய பனிச்சறுக்கு மாரத்தான் போட்டியில் பல்வேறு நாடுகளின் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
பாரம்பரிய பனிச்சறுக்கு ஸ்கை மாரத்தான் போட்டி : 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பாரம்பரிய பனிச்சறுக்கு மாரத்தான் போட்டியில் பல்வேறு நாடுகளின் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2 ஆண்டுகளாக, அங்கு ஸ்கை மாரத்தான் போட்டி நடைபெறவில்லை. இந்நிலையில், 52வது ஸ்கை மாரத்தான் போட்டி சுவிட்சர்லாந்தின் மலோஜா நகரில் இருந்து சான்ஃப் நகர் வரை நடந்தது. இதில் 40 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். 42 கிலோ மீட்டர் தூரத்துக்கு மாரத்தான் நடைபெற்ற நிலையில், ஆடவர் பிரிவில் சுவிஸ் வீரர் ரோமன் ஃபர்ஜரும், மகளிர் பிரிவில் சுவிஸ் வீராங்கனை நட்ஜாவும் வெற்றி பெற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்