"கடவுள் புண்ணியத்தில் தப்பி வந்துள்ளேன்" - உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர் பிரத்யேக பேட்டி

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், உக்ரைனில் படிக்கும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மாணவர், நாடு திரும்பி உள்ளார்.
x
ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று காலை இந்தியா வந்தடைந்தேன். உக்ரைனில் வசிக்கும் என் நண்பர்கள் அங்கிருந்து விரைவில் வெளியேற உள்ளதாக கூறியுள்ளனர். ரஷ்யா, போலந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளதாகவும் அவர்கள் என்னிடம் கூறினார்கள். உக்ரைன் விமான நிலையத்தில் இருந்தபோது, உக்ரைனின் 2 மாகாணங்களை தன்னாட்சிப் பகுதியாக ரஷ்யா அறிவித்ததை குறித்து கேள்விப்பட்டேன். உண்மையை சொல்லப்போனால் இந்த அறிவிப்பை கேட்டவுடன் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. எப்படியோ, கடவுள் புண்ணியத்தில் இந்தியா வந்து சேர்ந்துள்ளேன்.


Next Story

மேலும் செய்திகள்