வருகிற புதன்கிழமை ரஷ்யா - உக்ரைன் போர் ? - அச்சத்தில் தவிக்கும் மக்கள்

நாளை மறுநாள் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், தகவலை உறுதிப்படுத்த கூடுதல் தகவல் வேண்டும் என உக்ரைன் அதிபர் அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளார்.
x
நாளை மறுநாள் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், தகவலை உறுதிப்படுத்த கூடுதல் தகவல் வேண்டும் என உக்ரைன் அதிபர் அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளார். 

சீனாவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி முடிவதற்குள், எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது ரஷ்யா போரிட கூடும் என அமெரிக்கா எச்சரித்திருந்த நிலையில், வரும் பிப்ரவரி 16ம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க கூடும் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருந்தது. இதனால் உக்ரைன் மக்கள் பதற்றத்தில் தவித்து வரும் நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் உக்ரைன் அதிபர் ஈடுபட்டு வருகிறார். மேலும், ரஷ்ய படையெடுப்பு குறித்து கூடுதல் ஆதாரத்தை அமெரிக்கா வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார். இந்நிலையில், ரஷ்ய படையெடுப்பு குறித்து உறுதிப்படுத்த முடியாது என்றும் திடீர் தாக்குதலை தவிர்க்கவே போர் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் பேட்டி அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்