"செவி சாய்க்க அமெரிக்கா மறுக்கிறது".. தோல்வியில் முடிந்தது பேச்சுவார்த்தை - அறிவித்தது ரஷ்யா

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான ரஷ்ய அதிபரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக ரஷ்ய அதிபர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
x
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான ரஷ்ய அதிபரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக ரஷ்ய அதிபர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேலுடன் ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் தொடர்ந்து ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட அமெரிக்கா மறுப்பதாகவும் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. இருந்த போதும் ரஷ்யா பாதுகாப்பு குறித்து பைடன் தெரிவித்தவற்றை அதிபர் புதின் கருத்தில் கொள்வார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்