லிபியா பிரதமரை கொல்ல செய்ய முயற்சி - காரில் சென்ற போது துப்பாக்கிச்சூடு

லிபியா நாட்டின் பிரதமரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
லிபியா நாட்டின் பிரதமராக அப்துல் ஹமீத் அல் திபய்பா பதவி வகித்து வருகிறார். 

இவர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இதில், பிரதமரின் கார் மீது குண்டுகள் பாய்ந்து சேதம் ஏற்பட்ட நிலையில் அவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார். 

லிபியாவில் உள்நாட்டு போர் நடந்து வரும் சூழலில் அங்கு பிரதமர் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்