கனடாவில் நாளுக்கு நாள் வலுக்கும் போராட்டம் - பொருளாதார சீர்குலைவு ஏற்படும் அபாயம்

கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக லாரி ஒட்டுநர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
கனடாவில் நாளுக்கு நாள் வலுக்கும் போராட்டம் - பொருளாதார சீர்குலைவு ஏற்படும் அபாயம்
x
கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக லாரி ஒட்டுநர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. எல்லைத் தாண்டி செல்லும் லாரி ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுநர்கள் ட்ரக்குகளுடன் களம் இறங்கிய நிலையில், இந்தப் போராட்டத்தால் கனடா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு, நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. அமெரிக்காவின் டெட்ராய்டு மற்றும் கனடாவின் வின்ட்சர் நகரை இணைக்கும் அம்பாசிடர் பாலத்தை ஓட்டுநர்கள் ட்ரக்குகளுடன் முற்றுகையிட்டுள்ள காரணத்தால் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று அந்நாட்டுத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்