"தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம்" - இலங்கை அமைச்சர் விளக்கம்

தமிழக மீனவர்களின் படகுகளை கொண்டு செல்லும்படி இரண்டு வருட காலமாக தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தான் படகுகள் ஏலம் விடப்பட்டதாக இலங்கை கடல் தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
x
தமிழக மீனவர்களுடன் இலங்கை கடல் தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். 

அப்போது மீனவர்கள் மத்தியில் பேசியவர், இழுவை படகுகள் காரணமாக கடல் வளம் பாதிக்கப்படுவதாகவும், இதனை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என கூறினார். கடல் வளத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பேச தயாரக இருப்பதாக கூறினார். 

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக தகவல் வெளியானதையடுத்து தான் இந்திய தூதரக அதிகாரி கடிதம் எழுதியதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்