ஒரு நிமிடத்தில் 82 டின்கள்- தோள்பட்டை எலும்பால் தெறிக்க விடும் இளைஞர்

கியூபாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தோள்பட்டை எலும்பால் மது டின்களை உடைத்து அசத்தி வருகிறார்
x
கியூபாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தோள்பட்டை எலும்பால் மது டின்களை உடைத்து அசத்தி வருகிறார். மத்திய கியூபாவை சேர்ந்தவர் கேஸ்டெல்லனோஸ் (Castellanos).  22 வயதே நிரம்பிய இவர், தனது தோள்பட்டை எலும்புகளைப் பயன்படுத்தி, அதிவேகமாக காலி மது டின்களை உடைத்து வருகிறார். நிமிடத்துக்கு 82 டின்களை உடைப்பதாக கூறும் இவர்,  சுமார் 1 டன் எடை கொண்ட காரையும் தோள்பட்டை எலும்பு மூலம் இழுத்து, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார். தொழில்நுட்ப காரணங்களால் 2 முறை இவருக்கு கின்னஸ் விருது நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பேன் என அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்