ஜப்பான் அணு உலை விபத்து - நஷ்ட ஈடு கோரி புற்று நோய்க்குள்ளானோர் வழக்கு

ஜப்பானில் அணு உலை விபத்தினால் புற்றுநோய்க்கு உள்ளான ஆறு பேர் டெப்கோ நிறுவனத்தின் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஜப்பான் அணு உலை விபத்து - நஷ்ட ஈடு கோரி புற்று நோய்க்குள்ளானோர் வழக்கு
x
ஜப்பானில் 2011இல் புக்குசிமா அணு மின் நிலையம் சுனாமியினால் விபத்துள்ளாகி சுற்றுபுற கிராமங்களில், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அணு கதிர் வீச்சு பரவியது. 

இதைத் தொடர்ந்து சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசித்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் சிறுவர், சிறுமியராக இருந்த ஆறு பேருக்கு, சமீப வருடங்களில் தைராய்ட் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. 

தற்போது இவர்கள்17 முதல் 27 வரை வயதுடைய இளைஞர்கள். புக்குசிமோ அணு மின் நிலையத்தின் உரிமையாளரான டெப்கோ எனப்படும் டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் கம்பெனி மீது இவர்கள் ஆறு பேரும் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். 

மொத்தம் 40 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளனர். அணு உலை விபத்தினால் ஏற்பட்ட நோய்களுக்காக  டெப்கோ நிறுவனத்தின் மீது நஷ்ட ஈடு கேட்டு தொடுக்கப்பட்ட முதல் வழக்கு இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்