போலி பாஸ்போர்ட் - இலங்கை பெண் கைது

போலி பாஸ்போர்டில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண் குறித்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
போலி பாஸ்போர்ட் - இலங்கை பெண் கைது
x
போலி பாஸ்போர்டில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண் குறித்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம், போலி பாஸ்போர்ட் வைத்திருந்த இலங்கை பெண் லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார் இந்நிலையில், இவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், விடுதலைப்புலிகளோடு தொடர்பு உடையவர் என்றும், நிதி திரட்டும் பணியில் மேரி முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதும், தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு, டெல்லி தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. மேலும் மேரியுடன் தொடர்பில் இருந்த 4 பேரை கைது செய்யும் பணியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்