"டோங்கா எரிமலை வெடிப்பு 10 மெகா டன் வெடிபொருள் வெடித்ததற்கு சமம்"

டோங்கா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு, மற்ற கிரகங்கள் உருவான விதத்தை கண்டறிய உதவும் என நாசா விஞ்ஞானி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
x
டோங்கா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு, மற்ற கிரகங்கள் உருவான விதத்தை கண்டறிய உதவும் என நாசா விஞ்ஞானி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். பசிபிக் தீவு நாடான டோங்காவில் கடந்த 15ம் தேதி கடற்பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் சுனாமி உருவானது. இதில், அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இயல்பு நிலை அங்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், அந்த எரிமலை வெடிப்பு 10 மெகா டன் டி.என்.டி வெடி பொருட்களால் ஏற்படும் வெடிப்பு சம்பவத்துக்கு நிகரானது என்றும், இதன்மூலம் மற்ற கிரகங்கள் எப்படி உருவாகின என்பதை ஆராயமுடியும் என்றும் நாசாவை சேர்ந்த விஞ்ஞானி ஜேம்ஸ் கார்வின் கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்