பர்கினா ஃபாசோவில் ஆட்சிக் கவிழ்ப்பு..ஆட்சியைக் கைப்பற்றி ராணுவம் அதிரடி

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா ஃபாசோவில் ராணுவம் அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.
பர்கினா ஃபாசோவில் ஆட்சிக் கவிழ்ப்பு..ஆட்சியைக் கைப்பற்றி ராணுவம் அதிரடி
x
மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா ஃபாசோவில் ராணுவம் அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.

பர்கினா ஃபாசோவில் கடந்த சில மாதங்களாக அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அந்நாட்டு அதிபர் ரோச் கபோருக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில், ராணுவத்துக்கு அதிபர் ரோச் போதிய ஆதரவு தருவதில்லை என எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், அதிபர் ரோச்சை பதவியில் இருந்து நீக்கி, ஆட்சியைக் கலைத்து இருப்பதாக பர்கினா ஃபாசா ராணுவம் அதிரடியாக அறிவித்து உள்ளது. அதிபர் ரோச் தற்போது எங்கிருக்கிறார் என்பது குறித்து தெரிவிக்கப்படாத நிலையில், நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதாக ராணுவம் தெரிவித்து உள்ளது. இதனிடையே, அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அறிந்த மக்கள், தலைநகர் வாஹுடூஹேவில் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்