5ஜி வந்துருச்சு... உஷாரா இருங்க...! விமானிகளை எச்சரிக்கும் போயிங் நிறுவனம்

அமெரிக்காவில் 5ஜி அலைபேசி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது போயிங் விமானங்களின் செயல்பாடுகளை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து போயிங் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
x
அமெரிக்காவில் 5ஜி அலைபேசி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது போயிங் விமானங்களின் செயல்பாடுகளை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து போயிங் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

ஜெட் விமானங்கள் பறக்கும் உயரத்தை துல்லியமாக கண்டறிய, ரேடியோ அல்டிமீட்டர் என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. விமானத்தின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள இவை, ரேடியோ  அலைகளை பூமியை நோக்கி செலுத்தி, அவற்றின் எதிரொலி கிடைக்கும் நேரத்தை கொண்டு, பறக்கும் உயரத்தை துல்லியமாக கணக்கிடுகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படும் 4.4 கிகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளுக்கு மிக நெருக்கமாக 5ஜி சேவைகளின் அலைவரிசை உள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 2,500 அடிக்கு கீழே விமானம் இறங்கிய பின், 5ஜி அலைகற்றைகளின் குறிக்கீடுகளுக்கு, விமான ஓட்டிகள் எந்த நிமிடமும் தயாராக இருக்க வேண்டும் என்று போயிங் நிறுவனம் எச்சரித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் அமெரிக்காவிற்கு மீண்டும் போயிங்க் விமான சேவைகளை ஜனவரி 21இல் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்