உருமாறிய கொரோனாவுக்கு பூஸ்டர் பலன் தராது..WHO வெளியிட்ட அடுத்த அதிர்ச்சி

மீண்டும் மீண்டும் ஒரே தடுப்பூசியை பூஸ்டர் டோசாக செலுத்துவது பலன் தராது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
x
மீண்டும் மீண்டும் ஒரே தடுப்பூசியை பூஸ்டர் டோசாக செலுத்துவது பலன் தராது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் உரு மாறி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு 2 தவணை தடுப்பூசிகள் மட்டுமல்லாது பூஸ்டர் டோஸ்களையும் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசிகளையே மீண்டும் பயன்படுத்துவது பலன் தராது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. இதனால் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராகப் போராடும் தடுப்பூசிகளை புதிதாக உருவாக்க வேண்டும் என்றும், அதுவரை தற்போதைய கொரோனா தடுப்பூசிகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்