74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த சகோதரர்கள் ! - நெகிழ்ச்சி வீடியோ |

1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. எல்லை காரணமாக பிரிந்த குடும்பத்தில் இருந்த இரு சகோதரர்கள் அரை நூற்றாண்டிற்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர்.
x
1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. எல்லை காரணமாக பிரிந்த குடும்பத்தில் இருந்த இரு சகோதரர்கள் அரை நூற்றாண்டிற்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது குழந்தையான சித்திக் பாகிஸ்தானிலும், அவரது மூத்த சகோதரர் ஹபீப் இந்தியாவிலும் தங்கியுள்ளனர். தற்பொழுது ஹபீபிற்கு 80 வயது ஆகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான கர்தார்பூருக்கு சித்திக் வந்துள்ளார். இதே புனித தளத்தில் பஞ்சாப்பில் வசித்து வரும் ஹபீபும் சென்றுள்ளார். கர் தார்பூர் புனித தலத்தில் சகோதரர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டபோது சந்தோஷத்தில் கட்டித்தழுவி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தாயுடன் வசித்து வந்த ஹபீப் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறியுள்ளார். சகோதரர்களின் இந்த சந்திப்புக்கு புனித தலமான கர்தார்பூர் காரிடர் உதவியாக இருந்ததால் இருவரும் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்