"ஒமிக்ரானை குறைத்து மதிப்பிட வேண்டாம்" - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

"கொரோனாவை ஃப்ளு காய்ச்சல் போல் கருத வேண்டாம்" - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
x
கொரோனா பெருந்தொற்றை வெறும் ஃப்ளு காய்ச்சல் போல் கருத வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபமாக ஒமிக்ரான் பரவலால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும் இறப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனால் இதை வைத்து ஒமிக்ரானைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒமிக்ரான் பரவல் குறித்து இன்னும் தெளிவான புரிதல் இல்லாத சூழலில், வேகமாகப் பரவும் இந்த வைரஸ் எப்படி உருமாறும் என்று தெரியாததால்,  பெருந்தொற்று முடிந்துவிட்டது என்று சொல்லும் சூழலுக்கு இன்னும் வரவில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்