கஜகஸ்தானில் வெடித்த மக்கள் போராட்டம்..எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம்

கஜகஸ்தானில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியவர்களில் டஜன் கணக்கானவர்களை பாதுகாப்புப் படையினர் கொன்று குவித்துள்ளனர்.
கஜகஸ்தானில் வெடித்த மக்கள் போராட்டம்..எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம்
x
கஜகஸ்தான் நாட்டில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அல்மாட்டி நகர மேயர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். அவர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டு வீசிய நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. இதனால், அந்நாட்டின் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் அல்மாட்டி நகரிலும், மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்திலும் 2 வார காலத்துக்கு அவசர நிலைபியைப் பிரகடனப்படுத்தப்படுத்தினார். தொடர்ந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு மீதான விலையை குறைப்பதாக அறிவிக்கப்பட்டாலும் போராட்டங்கள் கைவிடப்படவில்லை. இதனால்  கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் தலைமையிலான அரசு நேற்று ராஜினாமா செய்தது. இந்நிலையில், போராட்டக்காரர்களுடனான மோதலில் டஜன் கணக்கானவர்களைப் பாதுகாப்புப் படை கொன்று குவித்த நிலையில், 18 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்