ஒமிக்ரான் உருவாக காரணம் என்ன? WHO விஞ்ஞானி புதிய தகவல்
ஒமிக்ரான் தொற்றுதல்கள் உருவாகாமல் தடுத்திருக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்
ஒமிக்ரான் தொற்றுதல்கள் உருவாகாமல் தடுத்திருக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
நவம்பர் 24இல் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் ரக கொரோனா வைரஸ் தற்போது 77 நாடுகளுக்கு பரவியுள்ளது.ஒமிக்ரான் பரவலை தடுக்க தேவையான கருவிகள் உலக நாடுகளிடம் இருந்தாகவும், ஆனால் அவற்றை சமமாக பகிர்ந்து பயன்படுத்த தவறி விட்டதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். உலக மக்கள் அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்க தேவையான தடுப்பூசிகள் இருந்ததாகவும், ஆனால் தடுப்பூதி தேசியவாத போக்குகள் இதை செயல்படுத்த தடையாக இருந்ததாக கூறியுள்ளார்.ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும், தங்களின் சொந்த மக்களை முழுமையாக பாதுகாக்க முயன்றனர் என்றார்.
ஆனால் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு அளிக்காவிட்டால், இந்த வைரஸ் உருமாறி, மீண்டும் பரவும் என்பதை மறக்கக் கூடாது என்றார்.
Next Story