அமெரிக்காவில் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக உயர்வு

அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரித்துள்ளது.
x
அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் மாத‌த்தில் சில்லறை விலை பணவீக்கம் 6 புள்ளி 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 1982ஆம் அண்டுக்கு பின் பதிவான மிக அதிக அளவாக கருதப்படுகிறது. கொரோனா காலத்தில் அமெரிக்காவில் பொருட்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் வரும் நிலையில், பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால், உற்பத்தியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக பொருட்கள் வழங்களில் தொய்வு ஏற்பட்டதால் விலை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா காலத்தில் கட்டுமான துறை கடுமையாக பாதிக்கப்பட்டால், தற்போது வீடுகளின் வாடகை கடுமையாக அதிகரித்துள்ளது. இதேபோல், எரிபொருள் விலை உயர்வும், பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்