சரக்குக் கப்பலில் கொழுந்துவிட்டு எரியும் தீ- தீயை அணைக்கும் பணி தீவிரம்
ஸ்வீடனில் சரக்குக் கப்பலில் பற்றிய தீயை அணைப்பதற்கு அந்நாட்டு கடற்படை போராடி வருகிறது.
ஸ்வீடன் நாட்டில் கோதன்பர்க் (Gothenburg) நகரையொட்டிய கடற்பகுதியில் மரத்துண்டுகளை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்குக் கப்பலில் கடந்த 4ம் தேதி, தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், மூன்று நாட்களுக்கு மேலாகியும் கப்பலில், தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. ஹெலிஹாப்டர்கள் மற்றும் கப்பல்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெறும் நிலையில், கப்பலில் மரத்துண்டுகள் இருப்பதால் தீயை அணைக்க இன்னும் நாட்கள் ஆகும் என ஸ்வீடன் கடற்படையினர் கவலை தெரிவித்து உள்ளனர்.
Next Story