வாரத்தில் 4.5 நாட்கள் மட்டுமே வேலை - ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி

ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி வாரத்திற்கு நான்கரை நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்கப்படவுள்ளது.
x
உலகில் முதன்முறையாக வாரத்திற்கு நான்கரை நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கும் முதல் நாடு ஐக்கிய அரபு அமீரகம் ஆகும். அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து இம்முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையும், வெள்ளிக்கிழமை மட்டும் காலை 7.30 முதல் மதியம் 12 மணி வரையும் பணி நேரம் நியமிக்கப்பட்டுள்ளது. வெள்ளி மதியம் தொழுகை முடிந்தவுடன், தொடர்ந்து இரண்டரை நாட்கள் அங்கு விடுமுறை ஆகும். தொழில் மற்றும் குடும்பங்களைப் பார்க்கும் வகையில் இந்த முடிவு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்