வெனிசுலா - கொலம்பியாவை இணைக்கும் பாலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறப்பு

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த வெனிசுலா மற்றும் கொலம்பிய நாடுகளுக்கிடையேயான பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
வெனிசுலா - கொலம்பியாவை இணைக்கும் பாலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறப்பு
x
கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த வெனிசுலா மற்றும் கொலம்பிய நாடுகளுக்கிடையேயான பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. பல அரசியல் காரணங்களால், சைமன் பொலிவர் தேசிய பலமானது மூடப்பட்டிருந்தது. வெனிசுலா மற்றும் கொலம்பிய நாடுகளை இணைக்கக் கூடிய இந்தப் பாலமானது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ள இப்பாலமானது காலை 6 மணி முதக் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் வர்த்தகம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், மாணவர்கள் மற்றும் மருத்துவ உத்தரவுகளைக் கொண்டவர்களுக்கு மட்டுமே எல்லை வழியாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டடுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்