குறைந்து வரும் உலகளாவிய இணைய சுதந்திரம் - டாப் 10 பட்டியல்

உலக அளவில் அளவில்லா இணைய சுதந்திரம் உள்ள டாப்-10 நாடுகளின் பட்டியலையும், இணைய சுதந்திரத்திற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் டாப் - 10 நாடுகளின் பட்டியலையும் தற்போது பார்க்கலாம்.
குறைந்து வரும் உலகளாவிய இணைய சுதந்திரம் - டாப் 10 பட்டியல்
x
நவீன உலகில் இன்டர்நெட் இருந்தால் போதும் ஒட்டுமொத்த உலகையும் ஒரு சுத்து சுத்திவிடலாம் என்றாலும், இணைய சுதந்திரம் என்பது எல்லாருக்கு ஒரே மாதிரி கிடைப்பதில்லை... ஒவ்வொரு நாடுகளிலும் அதற்கான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் மாறுபடுகின்றன... தொடர்ந்து 11 வது ஆண்டாக உலகளாவிய இணைய சுதந்திரம் என்பது குறைந்துள்ளதாக அமெரிக்க ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது... உள்நாட்டு  போர், தேர்தல், அரசியலமைப்பு, சர்வாதிகாரம் போன்ற பல்வேறு நெருக்கடிகளால் இணைய சுதந்திரம் என்பது பல வழிகளில் தடைபடுவதாக கூறப்பட்டுள்ளது.
இணைய சேவையை பெறுவதற்கான தடை, இணைய சேவைக்கான வரம்புகள், உரிமை மீறல்கள் உள்ளிட்ட அடிப்படைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இணைய சுதந்திரம் மிக குறைவாக இருக்கும் நாடு சீனா என்று கூறப்பட்டுள்ளது. இதே போல் பாகிஸ்தானிலும் இம்ரான் கான் பொறுப்பேற்ற பிறகு இணைய சுதந்திரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.உள்நாட்டு விவகாரங்கள் காரணமாக மியான்மர், ஈரான் போன்ற நாடுகளிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் இணைய சுதந்திரம் என்பது மக்களுக்கு போதிய அளவில் வழங்கப்படுவதில்லை... அதே நேரம் அளவில்லா இணைய சுதந்திரம் அளிக்கப்படும் டாப் - 10 நாடுகளில் இடம்பெற்றிருப்பவை பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளாக உள்ளன. ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து,  கனடா, ஜப்பான் போன்ற நாடுகளும் தங்கள் மக்களுக்கு போதிய இணைய சுதந்திரத்தை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இணைய சுதந்திரம் வழங்குவதில் 100க்கு 49 புள்ளிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 

Next Story

மேலும் செய்திகள்