கனடா நாடாளுமன்ற தேர்தல் - இந்திய வம்சாவளியினர் 17 பேர் வெற்றி

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் இந்தியர்களின் வெற்றி குறித்து விரிவாக பார்ப்போம்
கனடா நாடாளுமன்ற தேர்தல் - இந்திய வம்சாவளியினர் 17 பேர் வெற்றி
x
ஆட்சிகாலம் முடிவடைய 2 ஆண்டுகள் மீதமிருக்க, கொரோனா நெருக்கடி சமயத்திலும், ஆட்சியை கலைத்து தேர்தலை சந்தித்தார் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ..தனிபெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவைப்படும் நிலையில், லிபரல் கட்சியால் 156 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது
இதனால் நெருக்கடியான நிலையிலேயே மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார் ஜஸ்டின் ட்ருடோ..இந்த தேர்தலில் 3 அமைச்சர்கள் உட்பட 49 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர்.இந்திய வம்சாவளி மக்கள் சுமார் 16 லட்சம் பேர் வசிக்கும் சூழலில், தேர்தல் முடிவுகளின்படி 17 பேர் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 17ல் 16 பேர் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஜஸ்டின் ட்ருடோவின் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஜித் சஜ்ஜன்(harjit sajjan), வான்கூவர் தெற்கு(Vancouver South) தொகுதியில் 49 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.பெண் அமைச்சர்களான பர்திஷ் சாக்கர்(Bardish Chaggar) வாட்டர்ளூ(WATERLOO) தொகுதியில் 44.8 சதவீத வாக்குகளுடனும், அனிதா ஆனந்த் ஆக்வில்லா தொகுதியில் சுமார் 46 வாக்குகளுடனும் வெற்றி பெற்றனர்.அனிதா ஆனந்த்தின் தந்தை தமிழ்நாட்டையும், தாய் பஞ்சாப்பையும் பூர்வீகமாக கொண்டவர்கள்.லிபரல் கட்சிக்கு எதிர்த்து பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட புதிய ஜனநாயக கட்சி தலைவரான ஜக்மீத் சிங்(Jagmeet Singh,) சுமார் 40 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சந்திரகாந்த் ஆர்யா, நேப்பியன் தொகுதியில் வெற்றி பெற்றார்.இப்படி ஒட்டுமொத்தமாக அனைத்து கட்சிகளையும் சேர்த்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேர் கனடா நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.2019ம் தேர்தலில் இந்திய வம்சாவளியில் இருந்து 20 பேர் எம்.பியான நிலையில், இந்த முறை 17ஆக குறைந்துள்ளது.Next Story

மேலும் செய்திகள்