ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஹாட்ரிக் வெற்றி - கனடா நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள்

கனடா நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், தனது பிரதமர் பதவியை மீண்டும் தக்கவைத்துள்ளார், ஜஸ்டின் ட்ரூடோ.
ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஹாட்ரிக் வெற்றி - கனடா நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள்
x
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.காரணம், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மையை பெற தவறியது.338 இடங்கள் கொண்ட கனடா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 170 இடங்களை கைப்பற்றியாக வேண்டும் ஆனால் கடந்த முறை 155 இடங்களுடன் மைனாரிட்டி அரசின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்தார். இதனால் பெரும்பான்மை பெறும் நோக்கில் நாடாளுமன்றத்தை கலைத்தார், ஜஸ்டின் ட்ரூடோ .அதன் படி, இரண்டு ஆண்டுகளில் மீண்டும் இரண்டாவது முறையாக கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி, நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் இம்முறையும் ஜஸ்டின் ட்ரூடோ கட்சிக்கு பெரும்பான்மையான இடங்கள் கிடைக்கவில்லை, அந்த கட்சிக்கு கடந்த தேர்தலைவிட இரண்டு இடங்கள் மட்டுமே  கூடுதலாக கிடைத்துள்ளது. அதே நேரம் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும்
இந்திய வம்சாவளி ஜக்மீத் சிங் தலைவராக இருக்கும் நியூ டெமாக்ரெட் கட்சி 27 இடங்களில் முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் லிபரல் கட்சிக்கு 32 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், அதை விட கூடுதலாக   கன்சர்வேடிவ் கட்சிக்கு 34 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. கொரோனாவை சிறப்பாக கையாண்டாதை பயன்படுத்தி, தொற்று காலத்தில் தேவையற்ற முறையில் முன்கூட்டியே  தேர்தல் நடத்துவதாக ஜஸ்டின் ட்ரூடோ மீது பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
தந்தையின் மறைவிற்கு பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு கனடா பிரதமராக பதவியேற்ற ஜஸ்டின் ட்ரூடோ மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத காரணத்தினாலும், ஊழல் குற்றாட்டுகளினாலும் ஜஸ்டினால் மீண்டும் பெரும்பான்மையை பெற முடியவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மூன்றாவது முறையாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, தனது மனைவியுடன் நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மீண்டும் ஆட்சியமைக்க தங்களுக்கு வாய்ப்பளித்து, தெளிவான பாதையை மக்கள் காட்டியுள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்