சிறுவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி - தடுப்பூசி அளிக்க தயங்கும் பெற்றோர்

அமெரிக்காவின் பைசர் நிறுவனதின் கொரோனா தடுப்பூசி, 5 முதல் 11 வயது சிறுவர், சிறுமியர்களுக்கு பாதுகாப்பானது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சிறுவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி - தடுப்பூசி அளிக்க தயங்கும் பெற்றோர்
x
அமெரிக்காவின் பைசர் நிறுவனதின் கொரோனா தடுப்பூசி, 5 முதல் 11 வயது சிறுவர், சிறுமியர்களுக்கு பாதுகாப்பானது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி தற்போது 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அமெரிக்காவில் அளிக்கப்பட்டு வருகிறது. 5 முதல் 11 வயதுடைய சிறுவர், சிறுமியர்களுக்கு இந்த தடுப்பூசியை வீரியம் குறைந்த அளவில் அளித்து பரிசோதனைகள் செய்யப்பட்டு, அதன் முடிவுகளை பைசர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 மைக்ரோ கிராம் அளவிலான டோஸ்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், 5 முதல் 11 வயதுடையவர்களுக்கு 10 மைக்ரோ கிராம் டோஸ்கள் மட்டும் அளித்து சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவுகளில், 5 முதல் 11 வயதுடைய சிறுவர், சிறுமியர்களுக்கு இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், பெரியவர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் தான் இவர்களுக்கும் ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளதாக பைசர் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு ஆணையத்திடம் சோதனை முடிவுகள் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு விரைவில் அங்கீகாரம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்