தலிபான்களின் மேல் உள்ள அச்சம்.. அழகு நிலையம் வர பயப்படும் பெண்கள்

தலிபான்களின் மேல் உள்ள அச்சம்.. அழகு நிலையம் வர பயப்படும் பெண்கள்
தலிபான்களின் மேல் உள்ள அச்சம்.. அழகு நிலையம் வர பயப்படும் பெண்கள்
x
தலிபான்களின் மேல் உள்ள அச்சம்.. அழகு நிலையம் வர பயப்படும் பெண்கள் 

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்குப் பிறகு அழகு நிலையங்கள் காலியாக உள்ளதாக ஒப்பனைக் கலைஞர்கள் கவலை தெரிவித்தனர். தலிபான்களின் மீதுள்ள பயத்தின் காரணமாக அழகு நிலையங்களுக்கு வரவே பெண்கள் பயப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். 2 மாதங்களுக்கு முன்பு வரை திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்காக பெண்கள் கூட்டம் அழகு நிலையங்களில் அலை மோதும் என்றும், ஆனால், தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால், தற்போது அனைத்து கடைகளும் காலியாக உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். கடந்த 2 தசாப்தங்களுக்கு முன்பு தலிபான்களின் ஆட்சியின் போது பெண்கள் முகத்தை மறைக்கவில்லை என்றாலோ, விதிகளை மீறினாலோ, அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்