சிறையில் தமிழ் கைதிகளை மிரட்டிய சம்பவம் - இலங்கை அமைச்சர் ரத்வத்தே ராஜினாமா

இலங்கையில் கைதிகளை அச்சுறுத்திய விவகாரத்தில் அமைச்சர் லொஹான் ரத்வத்தே ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் பெரும் சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்ப்போம்..
சிறையில் தமிழ் கைதிகளை மிரட்டிய சம்பவம் - இலங்கை அமைச்சர் ரத்வத்தே ராஜினாமா
x
இலங்கையில் தமிழக கைதிகளை சிறைத்துறை அமைச்சர் துன்புறுத்திய சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது.இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலையில் தான் இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது.கடந்த 12 ஆம் தேதியும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இரவு நேரத்தில் ஹெலிகாப்டரில் சென்ற அமைச்சர் லொஹான் ரத்வத்தே, சிறைக்குள் அனுமதியின்றி துப்பாக்கி எடுத்து சென்றதோடு, அங்கு அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியதாக புகார் எழுந்தது.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், அமைச்சரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இவரோடு தமிழ் தேசிய அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் அமைச்சருக்கு எதிராக குரல் எழுப்பின . தொடர் எதிர்ப்புகளை அடுத்து பதவியில் இருந்து விலகுவதாக லொஹான் ரத்வத்தே அறிவித்தார். அதிபர் கோத்தபய ராஜபக்சவும் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.இருப்பினும் ராஜினாமா என்பது அவர் செய்த தவறை மறைக்கவே என சுட்டிக்காட்டியுள்ள தமிழ் தேசியக் கட்சி, லொஹான் மட்டுமல்லாது இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.சிறைச்சாலையில் நடந்த சம்பவம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதி ஹனா சிங்கர், கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்..





Next Story

மேலும் செய்திகள்