கின்னஸ் சாதனைகள் 2022 பதிப்பு - இடம் பெற்ற சாதனையாளர்கள், விலங்குகள்

கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தின் 2022ஆம் ஆண்டு பதிப்பில் இடம் பெற்றுள்ள சாதனையாளர்கள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
கின்னஸ் சாதனைகள் 2022 பதிப்பு - இடம் பெற்ற சாதனையாளர்கள், விலங்குகள்
x
1955 முதல் ஆண்டுதோறும் வெளியாகும் கின்னஸ் உலக சாதனைகள் புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகும் மிகப் பிரபலமான தொகுப்பு ஆகும்.


அமெரிக்காவைச் சேர்ந்த, 34 சென்டி மீட்டர்கள் நீளக் காதுகளைக் கொண்ட லூ என்ற நாய், உலகில் மிக நீண்ட காதுகளை கொண்ட நாய் என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது


அமெரிக்காவைச் சேர்ந்த ஸியான் கிளார்க், 4.78 விநாடிகளில், தலை கீழகாக,
தனது கைகள் மூலம் 20 மீட்டர்களை கடந்து, 2022 கின்னஸ் சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த பெத் லாட்ஜ் என்ற பெண், 100 மீட்டர் தூரத்தை 42.64 விநாடிகளில் குட்டி கரணம் அடித்து மிக வேகமாக கடந்துள்ள சாதனைக்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 30 விநாடிகளில் மிக
அதிக முறை பின்புறமாக பல்டி அடிக்கும் சாதனைக்காகவும் அவர் கின்னஸ் சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த, 3 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட பிரத்திக் மொகிடே, உலகின் மிக குள்ளமான பாடி பில்டர் என்ற அடிப்படையில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுகிறார்.


நெதர்லாந்தைச் சேர்ந்த, 7 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட ஆலிவர் ரிச்டெர்ஸ், உலகின் மிக உயரமான பாடி பில்டர் என்ற அடிப்படையில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.


நெதர்லாந்தைச் சேர்ந்த, 5 அடி 11 அங்குலம் உயரம் கொண்ட மரியா வட்டெல், உலகின் மிக உயரமான பெண் பாடி பில்டர் என்ற அடிப்படையில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.


ஜெர்மனியைச் சேர்ந்த, 4 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட எலிசபெத் மற்றும் காத்ரீனா ஆகிய இரட்டை சகோதரிகள், உலகின் மிக குள்ளமான பெண் இரட்டையர்கள் என்ற சாதனை படைத்துள்ளனர்.


கனடாவைச் சேர்ந்த, 7 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட ஆலிவர் ரியூ, உலகின் மிக உயரமான டீன் ஏஞ் இளைஞர் என்ற அடிப்படையில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.


ஐவரி கோஸ்ட்டை சேர்ந்த லெய்டியா கெய் என்ற பெண், தன் நீண்ட கூந்தலை கயிறாக கொண்டு, 30 விநாடிகளில் மிக அதிக முறை ஸ்கிப்பிங் ஆடியதற்காக
கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.


கனடாவைச் சேர்ந்த லாலிபாப் என்ற நாயும், சஸிமி என்ற பூனையும் ஒரு பொம்மை ஸ்கூட்டரில், 5 மீட்டர் தூரத்தை 4.37 விநாடிகளில் கடந்ததற்காக புதிய சாதனை பட்டியலில் இணைந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்