தலிபான்களை எதிர்த்து ஹிஜாப் அணிய மறுக்கும் ஆப்கன் பெண்கள் - சமூகவலைதளத்தில் புகைப்படங்கள் வெளியீடு

ஆப்கானில்தானில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற தலிபான்களின் கட்டளையை ஏராளமான ஆப்கன் பெண்கள் மீறி வருகின்றனர். இதைப் பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.....
தலிபான்களை எதிர்த்து ஹிஜாப் அணிய மறுக்கும் ஆப்கன் பெண்கள் - சமூகவலைதளத்தில் புகைப்படங்கள் வெளியீடு
x
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்றிய பிறகு, பெண்கள் மீது பல கடுமையான கட்டுபாடுகளை விதித்தனர். பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் ஆண்களும், பெண்களும் தனித்தனியாக கல்வி கற்க வேண்டும் என்று ஆணையிட்டனர்.ஹிஜாப் எனப்படும் முகத்தை மறைக்கும் துணியை, பெண்கள் கட்டாயமாக அணிய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர்.
இந்நிலையில் காபூல் பல்கலைகழகத்தில், முழுவதுமாக உடலை மறைக்கும் புர்கா அணிந்த பெண்கள் தலிபான்களின் கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதைப் பற்றிய புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகின.ஆனால் இதற்கு நேர் எதிராக, ஹிஜாப் அணியாமல், ஆப்கானிஸ்தானியர்களின்  பாரம்பரியமான வண்ண உடைகளை அணிந்த பெண்கள், தங்களின் புகைப்படங்களை அதிரடியாக சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பெண்கள் பலரும், துணிச்சலாக, தலிபான்களின் கட்டுப்பாடுகளை மீறி, ஹிஜாப் அணியாமல், தங்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.இது தான் எங்களின் பாரம்பரிய உடை என்றும், தலிபான்களின் ஆடை கட்டுப்பாடுகளை ஆப்கான் பெண்கள் எதிர்க்க தொடங்கி விட்டனர் என்றும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில், பதிவிட்டுள்ளனர், ஆப்கன் பெண்கள்.....



Next Story

மேலும் செய்திகள்