சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் வங்கி கணக்கு - விரைவில் 3வது பட்டியல் வெளியீடு

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் வங்கி கணக்குகள் குறித்த 3வது பட்டியலை இந்த மாதம் இந்தியாவிடம் ஸ்விட்சர்லாந்து அரசு வழங்க உள்ளது. அதுவும் இம்முறை முதல் முறையாக சொத்து விவரங்களும் வெளியிடப்பட உள்ளன.
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் வங்கி கணக்கு - விரைவில் 3வது பட்டியல் வெளியீடு
x
உலகிலேயே பாதுகாப்பாகப் பணத்தைச் சேமித்து வைக்கக்கூடிய வங்கிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது, சுவிஸ் வங்கி

இந்த வங்கியில் கணக்கு தொடங்கி பணம் டெபாசிட் செய்யும் வெளிநாட்டினர், பணத்திற்கு வரி செலுத்த தேவையில்லை

இதனால் கருப்பு பணத்தை பதுக்கி வைக்க பல வெளிநாட்டினரும் இந்த வங்கியை நாடுகின்றன. 

இந்நிலையில், மோடி தலைமையிலான அரசு கருப்பு பணத்தை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அதன் படி, ஸ்விட்சர்லாந்து அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி, இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களை தானாக பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளது, அந்நாடு அரசு. 

இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களை முதல் முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமும்

2வது தடைவையாக கடந்தாண்டு செப்டம்பர் மாதமும் வழங்கியது, ஸ்விட்சர்லாந்து அரசு. 

இந்நிலையில், இம்முறை மூன்றாவது பட்டியலை அளிக்க உள்ள ஸ்விட்சர்லாந்து அரசு... முதல் முறையாக இந்தியர்களின் சொத்து விவரங்களையும் பகிர உள்ளது. 

ரியல் ஸ்டேட் விவரங்கள், ஸ்விட்சர்லாந்தில் உள்ள இந்தியர்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் குறித்த விவரங்களும் வழங்கப்பட உள்ளன. 

இதோடு, இந்த சொத்துக்கள் மூலம் இந்தியர்களுக்கு கிடைக்கும் வருமானம் குறித்த விவரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற உள்ளன. 

அதே வேளையில், இந்தியர்களால் லாப நோக்கமற்ற அமைப்புகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை மற்றும் டிஜிட்டல் நாணயங்களில் செய்யப்படும் முதலீடு விவரங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

சொத்து விவரங்களை வெளியிடுவதன் மூலம் அவை அனைத்தும் சட்டத்துக்கு புறம்பானவை அல்ல என்பதை உறுதிப்படுத்த நினைப்பதோடு, 

ரியல் ஸ்டேட்டில் முதலீடு செய்யவும் ஸ்விட்சர்லாந்து  உகந்தது என்பதை எடுத்து கூற அந்நாடு விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்