தலிபான்கள் வசம் சென்ற ஆப்கான்: "ஊழல் மிகுந்த அரசே காரணம்" - ரோயா ரஹ்மானி குற்றச்சாட்டு

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியதற்கு, ஊழல் மிகுந்த அரசே காரணம் என்று, அமெரிக்காவிற்கான முதல் பெண் ஆப்கான் தூதுவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தலிபான்கள் வசம் சென்ற ஆப்கான்: ஊழல் மிகுந்த அரசே காரணம் - ரோயா ரஹ்மானி குற்றச்சாட்டு
x
இது குறித்து பேசிய ரோயா ரஹ்மானி, தலிபான்கள் விரைவாக ஆப்கானைக் கைப்பற்றியதில் தனக்கு ஆச்சிரியம் ஏதும் இல்லை எனவும்,


ஆப்கான் தலைமை சரியில்லாததும், ஊழல் மிகுந்த ஆட்சியுமே இவற்றிற்குக் காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.


மேலும் நாட்டை மிகவும் இக்கட்டான நிலையில் தவிக்க விட்டு, முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி ஆப்கானை விட்டு வெளியேறியதுதான், தனக்கு ஆச்சரியத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். 


ஆப்கானை அமெரிக்கா கைவிட்டதால், பாதிப்பு ஆப்கான் மக்களுக்கு மட்டும் இல்லை என்றும், வரும் காலங்களில் அமெரிக்கா மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


மேலும், அமெரிக்கா, ஒரு "ஒரு புதிய பாகிஸ்தானை" எதிர்கொள்ள உள்ளதாகவும், தலிபான்களின் கைப்பற்றல், இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் அலைகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்