"பஞ்ச்ஷிர் தலிபான்களிடம் தோற்கவில்லை" - ஆப்கான் முன்னாள் துணை அதிபர் விளக்கம்

அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஏறத்தாழ ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றினாலும், பஞ்ச்ஷிர் மாகாணம் அவர்களின் கட்டுப்பாட்டில் வராமல் தனித்து நின்றது.
பஞ்ச்ஷிர் தலிபான்களிடம் தோற்கவில்லை - ஆப்கான் முன்னாள் துணை அதிபர் விளக்கம்
x
அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஏறத்தாழ ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றினாலும், பஞ்ச்ஷிர் மாகாணம் அவர்களின் கட்டுப்பாட்டில் வராமல் தனித்து நின்றது. இந்நிலையில் ஆட்சியமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள தலிபான்கள், பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் கைப்பற்றி விட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  காபூல் நகரில் கொண்டாட்ட உணர்வை வெளிப்படுத்தும் விதமாக வானை நோக்கி துப்பாக்கியால் சுடும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் பஞ்ச்ஷிர் மாகாணம் வீழ்ந்ததாக வெளியான தகவலை மறுத்துள்ள ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே, தலிபான்களுக்கு இதை நிராகரித்துள்ள அம்ருல்லா சாலே,  எதிர்ப்பு தொடர்வதாகவும், எனது இடத்தில், எனது இடத்திற்காகவும் அதன் கண்ணியத்தை காக்கவும் நான் இருக்கிறேன்" என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்