அமெரிக்காவை புரட்டிப் போட்ட ஐடா புயல் - மழைநீரில் தத்தளிக்கும் குடியிருப்புகள்

அமெரிக்காவை புரட்டிப்போட்டிருக்கும் ஐடா புயலால் நியூயார்க், நியூ ஜெர்சி நகரங்களில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவை புரட்டிப் போட்ட ஐடா புயல் - மழைநீரில் தத்தளிக்கும் குடியிருப்புகள்
x
அமெரிக்காவை புரட்டிப்போட்டிருக்கும் ஐடா புயலால் நியூயார்க், நியூ ஜெர்சி நகரங்களில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஐடா புயல் காரணமாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. நியூயார்க்கில் 1 மணி நேரத்தில் மட்டும் 8 செண்ட்டி மீட்டர் அளவிற்கு மழை பெய்திருப்பதாக அந்நாட்டு தேசிய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. சாலைகள், ரயில் நிலையம், விமான நிலையம் என பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சுரங்கப்பாதைகளில் உள்ள துவாரங்கள் வழியாக மழைநீர் வேகமாக உட்புகுந்து வருவதால், சுரங்கப்பாதைகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. ஏராளமான குடியிருப்புகள் சேதமடைந்ததோடு, மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கையை தொடர்ந்து, பென்சில்வேனியாவில் அணைக்கு அருகே தாழ்வான பகுதியில் வசித்து வந்த 3 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஐடா புயல் காரணமாக வடகிழக்கு பகுதிகளில் மேலும் மழைபெய்யக்கூடும் என்பதால், மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு மாகாண அரசுகள் வலியுறுத்தியுள்ளன. நியூயார்க்கில் 12 முதல் 20 செண்ட்டி மீட்டர் அளவிற்கு மேலும் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும், அப்போது மணிக்கு 30 மைல் வேகத்தில் காற்று வீசும் எனவும் தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்