தலிபான் ஆட்சி - அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

தலிபான்களை அங்கீகரிப்பது தொடர்பாக அவசரம் காட்டப்போவதில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தலிபான் ஆட்சி - அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
x
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய அரசை அமைக்க உள்ள நிலையில், அதை அங்கீகரிப்பதா? வேண்டாமா என உலக நாடுகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், கடந்த காலத்தில் தலிபான்கள் இரக்கமற்றவர்களாக இருந்த‌தாகவும்,பழைய கொள்கையில் இருந்து தலிபான்கள் மாறிவிட்டார்களா? என்பது, அவர்களின் வருங்கால செயல்பாடுகளின் மூலம் தான் கணிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஐ.நா. சபை மற்றும் சர்வதேச சட்டங்களை தலிபான்கள் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள‌ அமெரிக்கா,தலிபான்களை அங்கீகரிக்க அவசரம் காட்டப்போவதில்லை எனவும், அவர்களின் செயல்பாடுகளை பொறுத்தே முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்