காபூலில் இருந்து வெளியேறும் அமெரிக்கா - விமான நிலையத்தைக் கைப்பற்றும் தலிபான்கள்

காபூலில் இருந்து வெளியேற அமெரிக்கா தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், தலிபான்கள் காபூல் விமான நிலையத்தைக் கைப்பற்றத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
காபூலில் இருந்து வெளியேறும் அமெரிக்கா - விமான நிலையத்தைக் கைப்பற்றும் தலிபான்கள்
x
காபூலில் இருந்து வெளியேற அமெரிக்கா தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், தலிபான்கள் காபூல் விமான நிலையத்தைக் கைப்பற்றத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 2 தசாப்தங்களாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இருந்த நிலையில், தலிபான்களின் அதிகாரக் கைப்பற்றலால், தற்போது முழுமையாக வெளியேறத் தயாராகியுள்ளன. பெரும்பாலான மக்கள் வெளியேற்றப்பட்ட பின்பும், இன்னும் ஆயிரம் பேருக்கு மேல், காபூல் விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பல்லாயிரக்கணக்கான அமெரிக்க மற்றும் இதர நாட்டு இராணுவப் படைகள் 1 லட்சத்திற்கும் அதிகமான ஆப்கான் மக்களை  அந்நாட்டில் இருந்து மீட்டனர். அதிகார மாற்றத்தால் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப்பற்றக்குறை வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், உணவுப் பொருட்களின் விலையும் மளமளவென உயர்ந்தது. மேலும் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க, ஆப்கான் மத்திய வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இது குறித்து பேசிய தலிபான் தரப்பு, விரைவில் இந்நிலைமைகள் சரிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்