சீன ராணுவத்துடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை - ஜோ பைடன் ஆட்சியில் முதல் முறையாக நடந்தது
ஜோ பைடன் அமெரிக்க அதிபரான பிறகு முதல் முறையாக அமெரிக்கா மற்றும், சீன ராணுவத் தலைமையகம் நேரடி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளன.
ஜோ பைடன் அமெரிக்க அதிபரான பிறகு முதல் முறையாக அமெரிக்கா மற்றும், சீன ராணுவத் தலைமையகம் நேரடி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளன. சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் தைவானின் பாதுகாப்பு, உய்குர் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் பல்வேறு விசயங்கள் தொடர்பாக முரண்பாடுகள் மற்றும் மோதல்கள் தொடர்கின்றன. இந்நிலையில் சீன ராணுவத்தின் சர்வதேச ராணுவ கூட்டுறவு அலுவலகத்தின் துணை இயக்குனர் ஜெனரல் ஹுவாங் ஸூபிங்குடன்
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் துணை செயலாளார் மைக்கேல் சேஸ் காணொலி மூலம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதில் இரு நாட்டு ராணுவ உறவு குறித்து பேசியதாக கூறப்படுகிறது
Next Story