"விமான நிலையத்தை ஆப்கானிடம் ஒப்படைப்போம்" - அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்

காபூல் விமான நிலையத்தை ஆப்கான் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டு வெளியேறுவோம் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
விமான நிலையத்தை ஆப்கானிடம் ஒப்படைப்போம் - அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்
x
ஆப்கானில் இருந்து தப்ப விரும்புவோரை வெளியேற்றும் முயற்சிக்கு, காபூலில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதல் முட்டுக்கட்டை போட்டது. இந்நிலையில், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளும் மீட்புப் பணிகளை நிறைவு செய்த நிலையில், நேற்று வெறும் 12 மணி நேரத்திற்குள் 4 ஆயிரத்து 200 பேர் ஆப்கானில் இருந்து மீட்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 14 முதல் இதுவரையில், கிட்டத்தட்ட 1 லட்சத்து 9 ஆயிரத்து 200 பேர் ஆப்கானில் இருந்து மீட்டுள்ளதாகவும் அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்