காபூல் விமான நிலையத்தில் பயங்கரம் - 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காபூல் சர்வதேச விமான நிலையம் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த இடத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 100க்கும் உயிரிழந்துள்ளனர்.
காபூல் விமான நிலையத்தில் பயங்கரம் - 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
x
காபூல் சர்வதேச விமான நிலையம் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த இடத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 100க்கும்  உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கடந்த 15 ஆம் தேதி தலிபான்கள் கைப்பற்றினர். வெளிநாட்டவர்கள் மட்டுமின்றி, உயிர்பிழைக்கும் ஆசையில் அந்நாட்டு மக்களும் அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் காபூல் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி கூட்டம்கூட்டமாக சென்றனர். விமான நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் சூழலை சாதகமாக பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா, இங்கிலாந்து தரப்பில் எச்சரிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் மக்களை விமான நிலையத்திற்குள் அனுமதிக்கும் அபே கேட் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.Next Story

மேலும் செய்திகள்