பேஸ்புக் நிறுவனத்தின் சிறப்பு குழு - பொய் பிரச்சாரங்களை தடுக்க திட்டம்

உலக அளவில் தேர்தல்கள் தொடர்பான விசியங்களை மேற்பார்வை செய்ய ஒரு சிறப்பு குழுவை அமைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பேஸ்புக் நிறுவனத்தின் சிறப்பு குழு - பொய் பிரச்சாரங்களை தடுக்க திட்டம்
x
உலக அளவில் தேர்தல்கள் தொடர்பான விசியங்களை மேற்பார்வை செய்ய ஒரு சிறப்பு குழுவை அமைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.உலக நாடுகளில் நடைபெறும் பல்வேறு தேர்தல்களில், பேஸ்புக் மூலம் தேர்தல் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் செய்வது தொடர்கிறது.பேஸ்புக் நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் அரசியல் தலைவர்கள், கட்சிகள், நிறுவனங்களை கட்டுப்படுத்த பல வகையான
முயற்சிகளை, தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவை
பல நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய அறிஞர்கள், கல்வியாளர்கள், துறைசார் நிபுணர்கள், செயல்பாட்டாளர்களை கொண்ட சிறப்பு குழுவை அமைக்க
பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நியூயார்க் டைமஸ் என்ற பிரபல
அமெரிக்க நாளிதழ் கூறுகிறது.உலக அளவில், பேஸ்புக் மூலம் செய்யப்படும் தேர்தல் பிரச்சாரங்கள், பொய் செய்தி பரப்புதல், திசை திருப்பும் விளம்பரங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவனத்திற்கு உரிய ஆலோசனைகளை இந்த குழு அளிக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்