ஆப்கான் விவகாரம்- மத்திய அரசு விளக்கம்

ஆப்கான் விவகாரம் குறித்து நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஆப்கான் விவகாரம்- மத்திய அரசு விளக்கம்
x
ஆப்கான் விவகாரம் குறித்து நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.இதில் தமிழகத்திலிருந்து திமுக எம்பிகள் திருச்சி சிவா , டி ஆர் பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜி கே வாசன், அதிமுக கட்சியை சேர்ந்த ரவீந்திரநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆப்கானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.உடனடியாக ஆப்கானில் உள்ள இந்தியர்களை மீட்கவும், தூதரக அதிகாரிகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், துயரத்தில் உள்ள ஆப்கான் மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யவும் இந்தியா தயாராக இருப்பதாக கூறப்பட்டது. 
 

Next Story

மேலும் செய்திகள்