விரிவான குடியேற்ற மசோதா குறித்து ஆலோசனை - குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் நடவடிக்கையை அதிபர் ஜோ பைடன் எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
விரிவான குடியேற்ற மசோதா குறித்து ஆலோசனை - குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை
x
அமெரிக்காவில் தாய் அல்லது தந்தையுடன் வசிக்கும் குழந்தைகள் 21 வயதை நெருங்கினால் அவர்கள் பெற்றோரை சார்ந்திருக்க முடியாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு ஹெச்1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் மூலம் குடியேறியவர்களின் 2 லட்சம் குழந்தைகள் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க குடியேறிகளின் குழந்தைகளுக்காக கொண்டுவரப்பட்ட"இம்ப்ரூவ் தி டிரீம்" என்ற திட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கவனம் செலுத்தி வருவதாகவும், குடியேறியவர்களின் குழந்தைகளுக்கான விரிவான குடியேற்ற மசோதாவை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். மேலும், ஜோபைடன் தலைமையிலான அரசு குடியேற்ற முறையில் சீர்த்திருத்தங்கள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்