தலிபான்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த நாடு தழுவிய இரவு ஊரடங்கு அமல்
ஆப்கானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நாடு தழுவிய இரவு நேர ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது.
ஆப்கானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நாடு தழுவிய இரவு நேர ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய தொடங்கியதும், தலிபான்கள் அரசப்படையை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர்.
நேட்டோ படைகளின் வெளியேற்றம் ஆப்கானிஸ்தான் ராணுவத்தை பலவீனம் ஆக்கியுள்ளது. இதனால் அங்கு தலீபான்களின் கை மீண்டும் ஓங்கி வருகிறது.
முழு ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றும் நோக்கில் தலிபான்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். முக்கிய நகரங்களையும், எல்லைப் பகுதிகளையும் கைப்பற்றிவரும் அவர்கள், நாட்டின் சரிபாதி பகுதியை தங்களின் கட்டுக்குள் வைத்துள்ளனர்.
அவர்களுக்கு ஆப்கான் ராணுவம் வான்வழி தாக்குதல் மூலம் பதிலடியை கொடுத்து வருகிறது.
ஹெல்மண்ட் மாகாணத்தின் நாத் அலி மற்றும் சன்கின் மாவட்டங்களில் தலிபான்களின் நிலைகளை குறிவைத்து ராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் 25 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுத கிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன.
தலிபான்களை ஒடுக்க ராணுவம் போராடி வரும் நிலையில், அவர்களுடை நடமாட்டம் இரவு நேரங்களில் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காபூல், பஞ்ச்ஷீர் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்கள் தவிர்த்து 31 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆப்கானில் சூழல் மோசமாகி வரும் நிலையில் மக்கள் ஈரான் வழியாக துருக்கிக்கு அகதிகளாக செல்வது அதிகரித்துள்ளது.
Next Story