கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து

கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து
கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து
x
கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து

சீனாவின் ஷாங்காய் கடற்கரையை, புயல் நெருங்கி வருவதால் விமானம் மற்றும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், கரையோர மக்கள் முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  ஜீஜியாங்க் மாகாணத்தின் ஷாங்காய் கடற்பகுதியில் நிலைக் கொண்டுள்ள புயல் அடுத்த சில மணி நேரங்களில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Typhoon In-Fa's என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அதிதீவிரமடைந்துள்ளதால் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து செல்லும் சர்வதேச விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுளது. இதேபோன்று, நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்