ஹேக்கர்களை சீனா பணியமர்த்தியுள்ளது - அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

கடந்த ஜனவரியில் மைக்ரோசாப்ட் அவுட்லுக் இ-மெயில் சர்வர்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறது. இவ்விவகாரத்தில் அமெரிக்காவுடன் அணி திரளும் நாடுகள் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஹேக்கர்களை சீனா பணியமர்த்தியுள்ளது - அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு
x
கடந்த ஜனவரியில் மைக்ரோசாப்ட் அவுட்லுக் இ-மெயில் சர்வர்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறது. இவ்விவகாரத்தில் அமெரிக்காவுடன் அணி திரளும் நாடுகள் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


இன்றைய இணைய உலகில் பொருளாதாரம் கம்ப்யூட்டருடன் பின்னி பிணைந்திருக்கிறது.  

அப்படியிருக்கையில் கம்ப்யூட்டர்களின் செயல்பாட்டை முடக்கும் சைபர் தாக்குதல் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு எதிரான தாக்குதலாக அமைகிறது. 

கடந்த மே மாதம் அமெரிக்காவில் எண்ணெய் விநியோகம் செய்யும் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டதால் விநியோகம் முடங்கி விலை ஏற்றம் உள்ளிட்ட விளைவுகள் நேரிட்டது.  

அமெரிக்கா சமீப காலமாக சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவின் உள்துறை, பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற 9 அரசு துறைகள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 சைபர் தாக்குதல் பல மாதங்களாக நடந்து கொண்டிருப்பதாகவும் இதனை தடுப்பது மிகவும் சிக்கலானது என்றும் அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு பாதுகாப்பு முகமை கூறியிருந்தது.

கடந்த ஜனவரியில் மைக்ரோசாப்ட் அவுட்லுக் இ-மெயில் சர்வர்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது அமெரிக்கா, பிரிட்டன் உள்பட உலக அளவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இலக்காகியிருக்கலாம் எனக் கூறப்பட்டது. 

அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவன அறிவுசார் சொத்துக்களை திருடும் வகையில் இந்த தாக்குதல் மிகப்பெரிய அளவில் இருந்ததாகவும் சைபர்பிரிவு நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதுவரையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களுக்கு ரஷ்யாவை குற்றம் சாட்டிவந்த அமெரிக்கா, தற்போது மைக்ரோசாப்ட் சர்வர் தாக்குதலுக்கு சீனாவே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சரகம் பணியமர்த்திய ஹேக்கர்களே இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர் என வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹேக்கிங் தொடர்பாக சீன பாதுகாப்பு அதிகாரிகள் 3 பேர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு அவர்களை தேடப்படுவோராக அறிவித்துள்ளது. 

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, ஜப்பான் ஓரணியாக திரண்டு கண்டனம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.  

ஆனால் சீன தரப்பில் இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என மறுப்பு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்