புலிட்சர் விருது வென்ற இந்திய ஊடகவியலாளர் - ஆப்கனில் தலிபான் தாக்குதலில் உயிரிழப்பு

உலக புகழ்பெற்ற புலிட்சர் விருது வென்ற இந்திய புகைப்பட ஊடகவியலாளர், டேனிஷ் சித்திக், ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலிட்சர் விருது வென்ற இந்திய ஊடகவியலாளர் - ஆப்கனில் தலிபான் தாக்குதலில் உயிரிழப்பு
x
உலக புகழ்பெற்ற புலிட்சர் விருது வென்ற இந்திய புகைப்பட ஊடகவியலாளர், டேனிஷ் சித்திக், ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரச்சினைகளை பேசாமலே சொல்லும் இந்த புகைப்படங்களை எடுத்தவர், இந்திய புகைப்பட ஊடகவியலாளர், டேனிஷ் சித்திக் டெல்லியைச் சேர்ந்த புகைபட ஊடகவியலாளரான டேனிஷ் சித்திக் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் 2010 முதல் பணி புரிந்து வந்தார்.ஈராக்கில் நடந்த உள்நாட்டுப் போர், 2015இல் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம், 2019 ஹாங்காங் போராட்டம், 2020இல் டெல்லியில் நடந்த கலவரங்கள், கொரோனா மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை ஆவணப்படுத்தியவர், டேனிஷ் சித்திக்...2018ல் மியான்மரில் ரோகிங்கியா அகதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை ஆவணப்படுத்தியதற்காக புலிட்சர் விருது வென்றார். தற்போது, ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதியை கையபற்றியுள்ள தலிபான் படையினரை எதிர்த்து, ஆப்கன் ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது.
ஆப்கானிஸ்தானின் கந்தஹர் நகரில், ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருடன் பயணம் செய்த போது வெள்ளியன்று தாலிபான்கள் நடத்திய திடீர் தாக்குதலில், டேனிஷ் சித்திக் மற்றும் மூத்த ஆப்கன் ராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டனர்.இதற்கு சில தினங்கள் முன்பு, தாலிபான்களின் எரிகுண்டு தாக்குதலில் டேனிஷ் சித்திக்கிற்கு கையில் காயம் ஏற்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்ட பின், குணமடைந்தார். போர் முனையில் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு முன் களம் சென்ற டேனிஷ் சித்திக், தலிபான் தாக்குதலில் உயிரிழந்தது, ஊடக உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்