கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பான் அரசு எப்படி நடத்தப் போகிறது?
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பான் அரசு எப்படி நடத்தப் போகிறது? செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பான் அரசு எப்படி நடத்தப் போகிறது? செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளன. அதேசமயம், கொரோனா கெடுபிடிகள் காரணமாக, ஜப்பானுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடைவிதித்த ஜப்பான் அரசு, தற்போது டோக்கியோவில் அவசரநிலையை அறிவித்திருக்கிறது. இதனால், பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக, ஜப்பான் அரசு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதால், இது பேரிழப்பாக கருதப்படுகிறது.
மேலும், 205 நாடுகளில் இருந்து வரும் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களை தொற்றிலிருந்து பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயமும் ஜப்பான் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் ஜப்பானில் தரையிறங்கியதும் கோவிட் கண்காணிப்பு செல்போன் செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டும்.
தினசரி இருமுறை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
விளையாடும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாகும். அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் செல்லலாம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,
விளையாட்டு அரங்கில் நாளொன்றுக்கு 230 மருத்துவர்கள், 310 செவிலியர்கள் பணியில் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் செல்லும் தமிழக வீரர்-வீராங்கனைகளின் மனநிலை
எப்படி இருக்கிறது?
ஒலிம்பிக் போட்டி மூலம் கிடைக்க வேண்டிய வருவாயை இழந்த
நிலையிலும், ஜப்பான் அரசு ஒலிம்பிக் போட்டிகளை
திட்டமிட்டபடி நடத்துவது மிகப்பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது.
Next Story

