குவைத்தில் வீட்டுவேலை பார்க்கும் இந்தியர்கள் - இருநாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

குவைத்தில் வீட்டு வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கும் வகையில் இருநாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
குவைத்தில் வீட்டுவேலை பார்க்கும் இந்தியர்கள் - இருநாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
குவைத்தில் வீட்டு வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கும் வகையில் இருநாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் 3 நாள் பயணமாக குவைத்து சென்றுள்ளார். குவைத் பிரதமர் ஷேக் சபா அல் கலித்தை சந்தித்த அவர் பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை ஒப்படைத்தார். அதனை‌ தொடர்ந்து குவைத் வெளியுறவு மந்திரி ஷேக் அகமது நாசர் அல் சபாவை ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து குவைத் வெளியுறவு அமைச்சர் ஷேக் அகமது நாசர் அல் சபாவை ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது  கொரோனா தொடர்பாக இருநாட்டு குடிமக்களும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கூட்டாக தீர்வு காண தங்களின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினர்.  மேலும் குவைத்தில் வீட்டு வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தானது. இதன் மூலம் சம்பளம், வேலைநேரம் உட்பட இந்திய பணியாளர்கள் தங்கள் உரிமைகளை சட்டரீதியாக பெறுவதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது. குவைத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்