தந்தையால் கடத்தப்பட்ட இரு குழந்தைகள்... கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்

சொந்த தந்தையால் கடத்தப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளில் ஒருவரின் உடல், கடலுக்கடியில் கண்டறியப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஸ்பெயினில் நிகழ்ந்துள்ளது.
தந்தையால் கடத்தப்பட்ட இரு குழந்தைகள்... கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்
x
தந்தையால் கடத்தப்பட்ட இரு குழந்தைகள்... கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் 

சொந்த தந்தையால் கடத்தப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளில் ஒருவரின் உடல், கடலுக்கடியில் கண்டறியப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஸ்பெயினில் நிகழ்ந்துள்ளது.பியாட்ரிஸ் சிம்மர்மேன் தனது இரு பெண் குழந்தைகளான, 6 வயதே நிரம்பிய ஒலீவியா மற்றும் 1 வயதான அன்னா ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், இரு குழந்தைகளையும் பியாட்ரிசின் முன்னாள் கணவர் தொமஸ் ஆண்டனியோ கடத்திச் சென்றுள்ளார். மேலும், கடத்தப்பட்ட இரு குழந்தைகளையும் பைகளில் அடைத்து, கடலுக்குள் மூழ்க வைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒலீவியாவின் உடல் மட்டும் 3 ஆயிரம் அடி ஆழத்தில் கண்டறியப்பட்ட நிலையில், மற்றொரு பை காலியாக இருந்துள்ளது. இதனால், அன்னாவின் உடல் கண்டுபிடிக்கப்படாமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதால், தேடுதல் பணியை மீட்புக் குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ஒலியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இரு குழந்தைகளையும் இழந்து பரிதவித்து வரும் தாய் பியாட்ரிசுக்கு நாடு முழுவதும் அனுதாபங்கள் வந்த வண்ணம் உள்ளன. 
 

Next Story

மேலும் செய்திகள்