கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க புதிய மருந்து - ஆய்வுக்கு உட்படுத்தப்படும் நிக்லோசமைடு

கொரோனா சிகிச்சையில் நிக்லோசமைடு என்ற மருந்தை பயன்படுத்துவதற்கான 2-ம் கட்ட பரிசோதனையை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் தொடங்கி உள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க புதிய மருந்து - ஆய்வுக்கு உட்படுத்தப்படும் நிக்லோசமைடு
x
கொரோனா சிகிச்சையில் நிக்லோசமைடு என்ற மருந்தை பயன்படுத்துவதற்கான 2-ம் கட்ட பரிசோதனையை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் தொடங்கி உள்ளது. 

கொரோனா நோயாளிகளுக்கு நிக்லோசமைடு என்ற ஒட்டுண்ணி தடுப்பு மருந்துமூலம் சிகிச்சை அளிப்பது தொடர்பான முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்நிலையில், இந்த மருந்துக்கான 2-ம் கட்ட பரிசோதனையை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலும், ஐதராபாத்தை சேர்ந்த லக்சாய் லைப் சயின்ஸஸ் என்ற தனியார் நிறுவனமும், இணைந்து தொடங்கி உள்ளன. 

சமீபத்தில், CSIR-IIM ஜம்மு மற்றும் பெங்களூரு NCBS ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில், நிக்லோசமைடு மருந்துக்கு வைரஸ் உள்நுழைவை தடுக்கும் திறன் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி என்கிற ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வி லும் நிக்லோசமைடு மருந்தை கொரோனாவுக்கு மாற்றியமைக்கப்பட்ட மருந்தாக பயன்படுத்த முடியும் என்றும் நிரூபணம் ஆகி உள்ளது. 

இந்நிலையில், பல இடங்களில் தொடங்கப்பட்டுள்ள 2-ம் கட்ட பரிசோதனை, 8 முதல் 12 வாரங்களுக்குள்  நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரிசோதனை வெற்றியடையும் பட்சத்தில், இந்த மருந்தை அவசரகாலத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதி கோரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்